No student devices needed. Know more
20 questions
ஊரெல்லாம் ஒரே விளக்கு அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன???
கண்ணில்லாத என்னால் அழமுடியும். பார்க்க முடியாது நான் யார்???
அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது அது என்ன?
ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை அது என்ன?
ஊருக்கெல்லாம் ஓய்வு உழைப்பவர்க்கும் ஓய்வு இவனுக்கு மட்டும் ஓய்வில்லை இரவும் பகலும் ஓட்டந்தான் அது என்ன?
ஒற்றைக் காலில் ஆடுவான் ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்?
கழுத்து உண்டு தலையில்லை உடல் உண்டு உயிர் இல்லை கையுண்டு விரல் இல்லை அது என்ன?
அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் அது என்ன?
அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும் அது என்ன?
அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் சக்கரம் அது என்ன?
அறிவின் மறுபெயர் இரவில் வருவது அது என்ன?
பிறந்தது முதல் வயெற்றாலே போகிறது அது என்ன?
பகலெல்லாம் வெறுங்காடு இரவெல்லாம் பூங்காடு அது என்ன?
வெயிலில் மலரும் காற்றில் உலரும் அது என்ன?
முன்னும் பின்னும் போவான் ஒத்த காலால் நிற்பான் அது என்ன?
முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான் அவன் யார்?
ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை அது என்ன?
ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீ அல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?
மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு. பூ உண்டு நான் யார்?
Explore all questions with a free account