No student devices needed. Know more
5 questions
கறிவேப்பிலை நம் உணவு வகைகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இவ்விலைகள் உணவுப் பொருட்களுக்கு மணமூட்டவும் மற்றும் பாதுகாக்கவும் பயன்படுகின்றன. இதன் இலைகளை உலர்த்திப் பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பொடி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, இவ்விலைகள் பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கறிவேப்பிலை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் அதோடு வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. வியாபார நோக்கத்தோடு கோவை, ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. கறிவேப்பிலை எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மை பெற்றது.
கறிவேப்பிலை ஏன் சமையலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது?
உணவுப் பொருட்களுக்கு மணமூட்டப் பயன்படுவதால்
உணவுப் பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படுவதால்
அனைத்து நிலைகளிலும் சமையலுக்குப் பயன்படுவதால்
பொடியாகச் சமையலுக்குப் பயன்படுவதால்
’தாளிப்பின் ராணி’’ என்னும் இக்கறிவேப்பிலையைக் கொண்டு பல்வேறு சமையல் பொருட்களை உருவாக்குகின்றனர். எடுத்துக்காட்டாகக் குழம்புகள், கூட்டுகள், கறி வகைகள், துவையல் முதலியனவற்றைக் கூறலாம். எங்கும், எப்பொழுதும், எளிதில் கிடைக்கும் கறிவேப்பிலை காய்கறி விற்பனையாளர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தருகின்றது.
2) கறிவேப்பிலையை வெளிநாட்டினர் வரவேற்பதால் ஏற்படும் நிலை என்ன?
பெருமளவு பயிரிடப்படும்
உள்நாட்டில் வியாபாரம் பெருகும்
எங்கும் வியாபாரம் பெருகும்
உலகெங்கும் பயிரிடப்படும்
மயில்கள் அன்று முதல் இன்று வரை புகழ் பெற்ற பறவைகளாகத் திகழ்கின்றன. பண்டைக்காலத்தில் இந்திய அரசர்கள் சாலமோன் மன்னருக்கு மயில்களை அன்பளிப்பாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது பண்டைக்காலத்தில் மயில்கள் பொன்னுக்கு நிகராக மதிக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. மாவீரன் அலக்சாண்டரும் இந்தியாவிலிருந்து தன் நாட்டுக்கு மயில்களைக் கொண்டு சென்றாராம். அங்கிருந்து ரோம் நாட்டிற்கும், மற்ற நாடுகளுக்கும் மயிலினம் பரவியதாகத் தெரிகிறது.
3) மயிலினம் மற்ற நாடுகளுக்கு எவ்வாறு பரவியது?
பொன்னுக்கு நிகராக மதிக்கப்பட்டதன் மூலம்
மயில்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டதன் மூலம்
மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் மூலம்
இந்தியாவில் புகழ் பெற்று இருந்ததன் மூலம்
முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த மயில் குஞ்சு பொரிக்கும் வரை அடை காக்கும்; முட்டையிலிருந்து வெளியேறிய இரண்டு மணி நேரத்திலேயே குஞ்சுகள் நடக்கத் துவங்குகின்றன. தாய் மயில் குஞ்சு மயில்களுக்கு இரை தேடச் சொல்லித்தரும் போது, ஆள் நடமாட்டம் உள்ளதா எனக் கவனிக்கும். யாரும் இல்லையெனில், குட்டி மயில்களைத் தனியாக இரை தேடப் பழக விடும். ஆள் நடமாட்டம் தெரிந்தால், ‘சமிக்ஞை’ (Signal) செய்து குஞ்சுகளை அழைத்துத் தோகை விரித்து மறைத்துக் கொள்ளும்.
4) தாய் மயில் ஏன் ஆள் நடமாட்டத்தைக் கவனிக்கிறது?
குஞ்சுகளுக்கு இரை தேடக் கற்றுத் தர வேண்டியிருப்பதால்
குஞ்சுகள் தனியாக இரை தேட வேண்டும் என்பதால்
குஞ்சுகளுக்குப் பாதுகாப்புத் தேவை என்பதால்
‘சமிக்ஞை’ செய்ய வேண்டும் என்பதால்
காடுகளில் வாழ்வதற்குரிய உணவு கிடைக்காததால், விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர், சோளம் உள்ளிட்ட பயிர்களை உட்கொள்கின்றன. சிறிது, சிறிதாக காட்டை விட்டு விளைநிலங்களுக்கு வரத் துவங்கிய மயில்கள் தற்போது, விளைநிலங்களை ஒட்டியுள்ள முட்புதர்களில் இனப்பெருக்கம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றன. இதனால், அதிசயப் பறவையாகப் பார்க்கப்பட்ட மயில் தற்போது வளர்ப்புப் பிராணிகளைப் போல கண்களுக்குத் தென்படத் துவங்கியுள்ளது.
5) . மயில்கள் ஏன் வளர்ப்புப் பிராணிகளாகக் கருதப்படுகின்றன?
நெற்பயிர், சோளம் உள்ளிட்ட பயிர்களை உட்கொள்வதால்
காடுகளை விட்டு வெளியேறி வருவதால்
விளைநிலங்களின் அருகில் குடும்பத்துடன் வாழ்வதால்
அதிசயப் பறவையாகக் கருதப்படாததால்